பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

465

465

திருத்தமுடன் வளரத் தொடங்கின. வளர்ந்து பெரியவர்களான பின், அவர்களிடமிருந்து பல குழந்தைகள் தோன்றின. இந்த வீட்டுக் குழந்தை களுடன், ஒண்டு குடியிருக்க வந்தவர்களின் குழந்தை களும் சேர்ந்து விளையாடத் தொடங்கின. நாளடைவில், வந்த குழந்தைகளும் பிறந்த குழந்தைகளோடு நின்று நிலைத்து விட்டன. வந்த குழந்தைகள் இடம் பிடித்துக் கொண்டதால், பிறந்த குழந்தைகள் சிலவற்றின் வளர்ச்சி குன்றிப்போனதும் உண்டு. வீட்டுக் காரர்கள், தம் வீட்டுத் தேவைகள் சிலவற்றை நிறை வேற்றிக் கொடுப்பதற்காக வெளியிலிருந்து சிலரை வரவழைத்துக் கொண்டதும் உண்டு. இப்படியாக, சொற்களாகிய மக்கள் எண்ணிக்கை தமிழ் வீட்டில் பெருகிவரலாயிற்று.

ஆம்! முதற்கால மக்களது மொழியின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் மிகமிகக் குறைவே. குழந்தைகள் சில சொற்களைக் கொண்டே மொழி பேசுதல்போல, முதற்கால மக்களும் சில சொற்கள் கொண்டே மொழிபேசினர். இஃது இயற்கையே யன்றோ !

நாளடைவில் நாகரிகம் மிகமிக, தேவைகள் பெருகப் பெருக, பிறர் கலப்பு ஏற்பட ஏற்படச் சொற் களும் பின்வருமாறு பெருகின.

(1) ஒவ்வொரு சொல்லிலிருந்தும் பல சொற்கள் கிளைத்தன. 'நட' என்னும் அடிப்படையிலிருந்து நடை, நடக்கை, நடத்தை , நடப்பு , நடவடிக்கை , நடம் , நடந்தான், நடந்தது முதலிய சொற்களும், 'உருள்' என்னும் அடிப்படையிலிருந்து உருளை, உருட்சி,