பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/47

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

43



வண்டி, வண்டல் என்பனபோல, சொற்களின் முதலெழுத்துக்களேயன்றி இரண்டாவது எழுத்துக்களை நோக்கியும் அகர வரிசை அமைக்கப்பட்டது. இந்த நூலிலும் மூன்றாவது-நான்காவது-எழுத்துக்கள் அகர வரிசையில் கவனிக்கப்படவில்லை. எனவே, இக்கால அகராதிகளில் உள்ளாங்கு, சொற்களை முதலெழுத்துத் தொடங்கி இறுதி எழுத்து வரையும் அகர வரிசையில் நோக்கி அடுக்கிய பெருமை பதினேழாம் நூற்றாண்டுப் பாதிரிமார்கட்கே உரியதாம்.

நம் நாட்டில் கிறித்துவ சமயம் பரப்ப ஐரோப்பாவினின்றும் கிறித்துவப் பாதிரிமார்கள் பலர் பதினேழாம் நூற்றாண்டில் வந்திறங்கினர். அவர்கள் தமிழ் கற்றார்கள். ஐரோப்பிய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகளும் இயற்றத் தொடங்கினார்கள். இவ்வகராதிகள், ஐரோப்பியர் தமிழ் தெரிந்து கொள்ளவும், தமிழர் ஐரோப்பிய மொழிகளை அறிந்துகொள்ளவும் பயன்பட்டன.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்-அதாவது 1679-இல், ‘ஆந்தம் தெ ப்ரோயன்சா’ (Fr. Antem de Proenca) என்னும் மேலைப்புலத் துறவியார் தமிழ்—போர்ச்சுகீசிய அகராதி இயற்றினார். பதினெட்டாம் நூற்றாண்டில்—1732-இல், இத்தாலி நாட்டிலிருந்து வந்த ‘பெஸ்கி’ (Fr. Beschi) என்னும் துறவியார் ‘சதுர் அகராதி’ என்னும் தமிழகராதி இயற்றினார். மேலும் பல ஐரோப்பியர்கள், பதினேழாம்—பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகள்

3