பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

466

உருட்டு, உருட்டல், உருண்டை , உருளி, உரல்' உருடை, முதலிய சொற்களும், 'குடி' என்னும் அடிப் படையிலிருந்து குடிமை, குடித்தனம், குடிகை, குடில், குடிசை , குடிசல், குடிஞை, குடும்பம், குடும்பு, குடும்பி, குடியானவன் முதலிய சொற்களும் கிளைத்துள்ளமை யறிக. ஒரு தொழிலின் பெயரிலிருந்தும் ஒரு பொருளின் பெயரிலிருந்தும் அத்தொழிலோடும் அப் பொருளோடும் தொடர்புடையனவற்றைக் குறிக்கும் குடும்பச் சொற்கள் தோன்றுவது இயற்கை.

(2) தேவைக் கேற்பப் புதுப்புதுப் பொருள்கள் தோன்றத் தோன்ற, முன்னமேயே உள்ள சொற் களுள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து சேர்ந்து புதுச் சொற்களாக வடிவெடுத்தன. மண் + வெட்டி = மண்வெட்டி ; மரம் + கால் = மரக்கால் ; நான்கு + கால் = நாற்காலி ; கொடுமை (வளைவு) + காய் + புளி = கொடுக்காய்ப் புளி ; திரு + பாதிரி + புலி + ஊர் = திருப்பாதிரிப் புலியூர் முதலிய அந்தக் காலத்துப் பெயர்களையும் - வான் + ஒலி = வானொலி ; மின் சாரம் = மின்சாரம் ; வானம் + ஊர்தி + வானவூர்தி ; புகை வண்டி நிலையம் - புகைவண்டி நிலையம் ; திசை - காட்டும் கருவி = திசை காட்டுங் கருவி முதலிய இந்தக் காலத்துப் பெயர்களையும் நோக்குக.

Wள்

(3) கடவுட் கொள்கை , கலை, வாணிகம், அறிவியல், அரசாட்சி முதலியன காரண மாக வேற்று நாட்டாரின் - வேற்று மொழியாளரின் தொடர்பு ஏற்பட்டதால், வேற்று மொழிச் சொற்கள் பல, ஏற்கனவே இருந்த சொற்களினூடே வரம்பு கடந்து புகுந்து கலந்து விட்டன: ஜலம், சந்தோஷம்,