பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

467

467

சாமி, தத்துவம், முதலிய சம்ஸ்கிருதச் சொற்களும்; அந்தஸ்து, குல்லா, சமக்காளம் முதலிய இந்துத்தானி சொற்களும்; ஆசாமி,வசூல் , மாமூல் முதலிய அரே பியச் சொற்களும்; சிபாரிசு, சுமார் , மேசை முதலிய பாரசீகச் சொற்களும் ; சன்னல், சாவி, அலமாரி முதலிய போர்த்துகீசியச் சொற்களும்; புதுச்சேரி மாநிலப் பகுதியில் வாங்கு (விசிப் பலகை), தளவா (காவல் நிலையத் தலைவர்) முதலிய பிரஞ்சு மொழிச் சொற்களும் தமிழில் இரண்டறக் கலந்துள்ளமை காண்க. தமிழ் மொழியில் பல துறைகளிலும் ஆங்கில மொழி புகுந்து புரியும் திருவிளையாடல்களைச் சொல்லவே வேண்டியதில்லை.

(4) மொழிக்கு மொழி இயற்கையாகப் புகும் சொற்களே யன்றி, வந்த மொழியாளர் எப்படியாவது தம் மொழிச் சொற்களைப் பரப்ப வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து புகுத்திய வன்செய் லாலும், 'யார் ஆண்டால் என்ன?' என்ற போக்கில் சொந்த மொழியாளர் சோம்பியிருந்ததாலும் பிற மொழிச் சொற்களின் எண்ணிக்கை ஏறிவிட்டது.

(5) அரசனை நம்பிக் கணவனைக் கைவிட்ட கதையே போலவும், தாய் தண்ணீரின்றித் தவிக்கக் கும்பகோணத்தில் தம்பி கொடை பல புரிந்த கதையே போலவும், வந்த மொழியாளர் பரப்புவது ஒரு புறம் இருக்கச் சொந்தமொழியாளரே தம் சொந்த மொழியைப் பயன்படுத்துவது இழிவெனப் புறக்கணித்து, வந்த மொழிகளே உயர்ந்தவை என வரவேற்று, வீட்டிலும் நாட்டிலும் அம்மொழிகளையே பயன்படுத்தியும் - பயன் படுத்த இடந்தந்தும் உணர்வற்று வாழ்ந்ததால், சொந்த மொழிச் சொற்கள் பல வழக்கற்றுப் போக,