பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

469

நான்கு விதச் சொற்கள்

பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச் சொல் என்னும் நால்வகைச் சொற்களேயன்றி, இயற் சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன வாக நான்கு விதச் சொற்கள் தொல்காப்பியத்திலேயே பேசப்பட்டுள்ளன. இவற்றுள் இயல் சொல் என்பது, அம்மா, அப்பா, தண்ணீர், காற்று, உடல், உயிர் என்பன போல எல்லோர்க்கும் புரியக் கூடிய இனிய எளிய தூய இயற்கையான பேச்சு வழக்குத் தமிழ்ச் சொல்லாகும்;

"இயற் சொல் தாமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. என்பது தொல்காப்பிய நூற்பா.

செந்தமி ழாகித் திரியாது யார்க்கும்

தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல். என்பது நன்னூல் நூற்பா.

ஒரு சொல்லைச் சொன்னால், இச்சொல் எந்தப் பொருளைக் குறிக்கிறது? இந்தப் பொருளோ? அந்தப் பொருளோ? என்ற திரிபுக்கு (மயக்கத்திற்கு) இட மின்றி இயற்கையாக எளிதில் பொருள் உணர்த்தும் சொல் இயற்சொல்லாகும். இங்ஙனமின்றி, இச் சொல்லுக்கு இந்தப் பொருளோ - அந்தப் பொருளோ என்றதிரிபுக்கு இடமாகி அரிதில் (சிரமத்தில்) பொருள் உணரத்தக்க சொல் திரி சொல் ஆகும். ஒரு பொருள்