பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

471

471

அவர் காலத்திற்குப் பின், தமிழ் மாநிலத்திற்கு அப்பாலுள்ள வேற்று நாடுகளில் வழங்கும் வேற்று மொழிகளிலிருந்தும் பல சொற்கள் தமிழ் மொழியில் புகுந்து விட்டன. எனவே, அவற்றையும் திசைச் சொற்களென , எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த நன்னூலில் பவணந்தியார் கூறியுள்ளார். செந்தமிழ். வழங்கும் பன்னிரு உள் நாடுகளில் வழங்கும் வட்டாரச் சொற்களே யன்றி, தமிழ் மாநிலத்திற்கு அப்பாலுள்ள பதினேழு வெளி நாடுகளிலிருந்து வந்த சொற்களும் திசைச் சொற்கள் என்பது நன்னூல் கருத்து.

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பின்வே திசைச்சொல் என்ப

என்பது நன்னூல் நூற்பா.

இறுதியாக வட சொல் வருமாறு :- தமிழ் மாநிலத்தின் வடக்கே வழங்கிய சம்சுகிருத மொழியில் லிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்குஞ் சொல் வட சொல் எனப்படும். இருமொழிகட்கும் பொதுவான எழுத்துக்களால் ஆன வட சொற்கள் அப்படியே தமிழில் வழங்கப்படும். சம்ஸ்கிருதத்திற்கே உரிய சிறப்பெழுத்துக்களாலும், பொது எழுத்து - சிறப் பெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களாலும் ஆன வடசொற்கள் தமிழ் ஒலிக் கேற்பச் சிதைந்து திருந்தி வழங்கப்படும்.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். என்பன தொல்காப்பிய நூற்பா.