பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474


ஒரு பொருள் பல் பெயர்கள்

'ஒரு பொருள் பல் பெயர்கள்' என்னும் தலைப்பு , நிகண்டின் முப்பெரும் பிரிவுகளுள் முதலாவதாகிய 'ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி' என்பதே யாகும். சேந்தன் திவாகரம் முதலிய நிகண்டுகளில் உள்ள பன்னிரண்டு தொகுதிகளுள் முதல் பத்துத் தொகுதி களும் இந்த ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதிகளே' யாகும்.

ஒரு பொருளைக் குறிக்க ஒரு பெயர் போதாதா? பல பெயர்கள் ஏன்? எடுத்துக் காட்டாக, - யானை என்னும் ஒரு பொருளைக் குறிக்கத் திவாகர நிகண்டில் முப்பத்தெட்டுப் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு:

(யானையின் பெயர்) தும்பி, கடிவை, புகர்முகம், தோல், கரி,

உம்பல், வயமா, பகடு, நால்வாய், கரிணி, குஞ்சரம், கயமே, களபம், மருண்மா , தந்தி, மாதங்கம், ஒருத்தல், களிறு, சிந்துரம் , கறையடி, எறும்பி, வழுவை, வாரணம் , வேழம், வல்விலங்கு, நாகம், மதகயம், அத்தி, இபம், கும்பி, போதகம், உவாவே, தூங்கல், மாதிரம், மறமலி கைம்மா, ஆம்பல், கோட்டுமா,

பிறவும் புழைக்கையோடு, யானைப் பெயரே என்பது திவாகர நூற்பா. இது போலவே, சிவனைக் குறிக்கத் திவாகரத்தில் அறுபத்து மூன்று பெயர்கள்