பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475

475

சொல்லப்பட்டுள்ளன. இவ்வாறாக ஒரு பொருளைக் குறிக்கப் பல பெயர்கள் ஏற்பட்டிருப்பத்திலுள்ள உண்மை யாது? அப்படி ஏற்பட்டதற்குப் பின் வருபவை பொருட்டுக்களாக (காரணங்களாக) இருக்கலாம் :

(1) ஒரு மொழியில் ஒரு பொருளுக்குப் பல பெயர் கள் இருப்பது, அம்மொழியின் சொல் வளத்தை - சொற் களஞ்சியத்தை - சொற் செல்வத்தை அறிவிக்கிறது. பணக்காரர் வீட்டில் கல (பாத்திர) வகைகளிலும், உடை வகைகளிலும், அணி (நகை) வகைகளிலும், மற்றும் அனைத்து வகைகளிலும், பற்பல இருக்கும். இது பணக்காரக் குடும்பத்திற்கு அறிகுறி. இது போலவே சொற்கள் பெருகியிருப்பது பணக்கார மொழிக்கு இயல்பு நமது தமிழ் மொழியும் பண்டு தொட்டுள்ள பணக்கார மொழியன்றோ?

சரி, உண்மைதான்! இவ்வளவு சொற் செல்வங் களும் மொழிக்கு எப்படிக் கிடைத்தன.

(2) ஒரு குடும்பத்தின் தலைவனுக்குப் பிள்ளைகள் பலர் உள்ளனர். ஒவ்வொரு பிள்ளையும் ஈட்டிய செல்வத்தைத் தொகுத்துக் கணக்கிட்டுத் தன் செல்வ மாகத் தலைவன் கருதுவது இயல்பே. அவ்வாறே, தமிழ் வழங்கும் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் பேச்சு வழக்காறுகளைத் தொகுத்துக் காணுங்கால், சொற் செல்வம் பெருகித் தோன்றுகிறது. எடுத்துக் காட்டாக, - தமிழ்நாட்டின் வட பகுதியினர் 'வழி' யென்று சொல்வதை, தென் பகு தி யினர் 'தடம்' என்னும் சொல்லால் குறிக்கின்றனர். இதே பொருளில் பாதை, பாட்டை என்னும் சொற்களும் பரவலாகப்

30