பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

476

பல விடயங்களிலும் வழங்கப்படுகின்றன. இவையே யன்றி, செய்யுள் வழக்கில் நெறி, யாறு, அதர், வரி முதலிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை யெல்லாம் தொகுத்துப் பார்க்குங்கால், ஒரு பொருள் பல் பெயர்களின் எண்ணிக்கை பெருகுவதைக் காண லாம். இவை மட்டுமா?

(3) பொருளில் (அர்த்தத்தில்) சிறுசிறு வேறு பாடுடைய சொற்கள் பல, நாளடைவில் அவ் வேறு பாடுகள் மறைந்தோ அல்லது - மறைக்கப்பட்டோ ஒரே பொருளில் வழங்கப்படுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக, அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம், கவலை, விடங்கர், பாதை, படுகர், மடு, அளக்கர் ஆகிய சொற்கள் வழி என்னும் பொருள் உடையனவே. ஆனால், இவற்றுள் பொருளில் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு . அவையாவன :- அத்தம், கபம், கடறு, தூம்பு, சுரம் ஆகிய சொற்கள், கடப்பதற்கு மிகவும் கடினமான (அரு நெறியை) வழியைக் குறிக்கும் பெயர் களாம். கவலை என்னும் சொல், ஒரு பாதையிலிருந்து பல பாதைகள் பிரியும் கவர் நெறியைக் குறிக்கும் பெயராகும். விடங்கர் என்பது சிறு வழியையும், பாதை என்பது பெரு வழியையும் குறிக்கும் பெயர் களாம். படுகர், மடு என்னும் சொற்களோ , ஏறி யிறங்கும் மேடு பள்ளமுடைய - ஏற்றத் தாழ்வுடைய வழியைக் குறிக்கும் பெயர்களாம். அளக்கர் என்பதோ நீண்ட வழியைக் குறிக்கும் பெயராம். இச் சொற்கள் ளெல்லாம் சிலவிடங்களில் வழி என்னும் பொதுப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.

(4) ஒரு பொருளுக்கே பல பொருட்டுக்கள் பற்றிப் பல பெயர்கள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, -