பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

481

ஒரு சொல் பல் பொருள்

'ஒரு சொல் பல பொருள்' என்னும் தலைப்பு , நிகண்டின் முப்பெரும் பிரிவுகளுள் இரண்டாவதாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என்பதே யாகும். திவாகரம் போன்ற நிகண்டுகளில் உள்ள பதினோராவது தொகுதி இதுதானே!

ஒரு சொல் பல் பொருள் என்றால், ஒரு சொல்லுக்கே பல பொருள்கள் (அர்த்தங்கள்) இருப்பது. எடுத்துக் காட்டாக, வட மொழியிலிருந்து வராத அரி' என்னும் தனித் தமிழ்ச் சொல்லுக்குப் பதினைந்து பொருட்களும், கடி என்னும் சொல்லுக்குப் பன்னிரண்டு பொருட் களும் திவாகரத்தில் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு:

[ அரி என்னும் பெயர்ச் சொற் பொருள்) கண், வரி, கடல், பொன், கிண்கிணிப் பெய்பரல்,

பொன்னிறம், குதிரை, தவளை, குரங்கு, பகை, வாள், சயனம், வலி, வண்டு, வெம்புகை,

எனப் பதினைந்தும் அரியெனப் புகல்ப.

[கடி என்னும் பெயர்ச் சொற்பொருள்) கடி யென் கிளவி : காப்பே, கூர்மை ,

விரையே, விளக்கம், அச்சம், சிறப்பே, வரைவே, மிகுதி, புதுமை, தோற்றம், மெய்படத் தோன்றும் பொருட்டா கும்மே.

ஐயமும், கரிப்பும், ஆகலும் உரித்தே. என்பன திவாகர நூற்பாக்கள் . திவாகரத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் விடுபட்ட