பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

482

பொருள்கள் எத்தனையோ உள்ளன. அவற்றைப் பிற நிகண்டுகளிலும், அகராதிகளிலும் காணலாம்.

இவ்வாறு ஒரு சொல்லுக்கே பல பொருள்கள் எப்படி வந்தன? ஏன் வந்தன? ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் இருப்பதுதானே பொருத்தம்? ஒரே சொல்லால் பல பொருள்களை அழைத்தால், அது, 'கஞ்சத்தனமும் பஞ்சத்தனமும் நிறைந்த ஏழ்மை நிலையின் அறிகுறி யல்லவா? அப்படியென்றால், சொல் வளம் இல்லாத ஏழைமொழி தமிழ்மொழி என்றல்லவா பொருள்படும்?

இந்தப் பெரும் புதிருக்கு இங்கே விடை காண வேண்டும். ஒரு சொல் பல் பொருள் என்றால், பல பொருள்களை ஒரே சொல்லால் அழைக்கிறோம் என்றுதானே பொருள் ! அவ்வாறு அழைக்க நேர்ந்த தின் பொருட்டுக்களைச் சிறிது ஆய்வாம் :

(1) ஒரே சொல்லால் பல பொருள்களை அழைப்பது, மொழியின் சொல்லேழ்மையைக் குறிக்கிறது - எனக் கொள்ளலாகாது; மாறாக, மொழி பேசும் மக்களின் சொற்செட்டை - பேச்சு வழக்கின் சிக்கனத்தைக் குறிப்பதாகவே கருதவேண்டும். எடுத்துக் காட்டாக, உலகம் அறிந்த காந்தி, நேரு, கென்னடி, மாக்மில்லன் முதலிய பெயர்களை எடுத்துக்கொள்வோம். இப்பெயர்கள் ஒவ்வொருவரை மட்டும் குறிப்பனவல்ல; அவ்வம் மரபில் தோன்றும் தொடர்புடைய பலரையும் குறிக் கின்றன. அதாவது, காந்தி என்னும் ஒரே பெயர் தந்தை காபா காந்தியையும் மைந்தன் கரம்சந்த் காந்தி யையும் குறிப்பதையும், நேரு என்னும் ஒரே பெயர் தந்தை மோதிலால் நேருவையும் மைந்தன் சவகர்லால் நேருவையும் குறிப்பதையும் அறியலாம். இன்னும்