பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485


போருக் கெழுந்தது' என்ற தொடரிலோ, புதுச்சேரி என்னும் பெயர் அந்த ஊரைக் குறிக்காமல், அவ்வூரில் வாழும் மக்களுக்கு ஆகிவருகிறது. இந்தத் தொடரில் புதுச்சேரி என்னும் சொல்லுக்கு 'ஆகு பெயர் ' என்று பெயராம். ஒன்றன் பெயர் அதனோடு ஏதாவது ஒரு வகையிலாவது தொடர்புடைய பொருளுக்குத்தான் ஆகிவருமே தவிர, தொடர்பில்லாத பொருளுக்கு ஆகிவராது என்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது.

புதுச்சேரியில் வாழும் மக்கள் என நீளமாகப் பேசும் முயற்சியைக் குறைத்து, புதுச்சேரி போருக் கெழுந்தது எனச் சொட்டாக - சிக்கனமாக மக்கள் பேசுவது இயல்பு. எனவே, புதுச்சேரி என்னும் ஒரே சொல், ஊரையும், ஊர் மக்களையும் குறிப்பதுணர்க. பெரும்பாலான 'ஒரு சொல் பல் பொருள்கள்' இப்படித் தான் மொழிச் செட்டினால் தோன்றியிருக்கக் கூடும் என்னும் கருத்து இப்போது புலனாகுமே!

மற்றும், மேலே எடுத்துக்காட்டியிருப்பது இட வாகு பெயர் எனப்படும். அதாவது, புதுச்சேரி என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்தில் வாழும் மக்களுக்கு . ஆகிவருதலின் இடவாகு பெயராம். இது போலவே 'ஒரு சொல் பல் பொருள்' என்ற நிலையில் இன்னும் பல ஆகுபெயர்கள் உள்ளன. 'கார் அறுத்தான்' என்ற தொடரில், கார் என்னும் (கார்) காலத்தின் பெயர், அக்காலத்தில் விளையும் (கார்) நெல்லுக்கு ஆகிவருவது கால வாகுபெயராம். 'நீலம் சூடினாள்' என்னும் தொட ரில், நீலம் என்னும் நிறப் பண்பின் பெயர், அந்நிற. முடைய குவளை மலரைக் குறிப்பது பண்பாகுபெயராம். 'வற்றல் தின்றான்' என்னும் தொடரில், வற்றல் (வற்று தல்) என்னும் தொழிலின் பெயர், வற்றிப் போன உண