பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

487

487

மொழியின் தொன்மையைக் குறிக்கிறது - என்ப தாகும். நமது தமிழ் மொழியையே எடுத்துக்கொள் ளலாம். தமிழில் இப்போதுள்ள சொல் வளம் மொழி தோன்றிய முதற் காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே, முதற் கால மக்கள், இருந்த சில சொற்களைக் கொண்டே, தொடர்புடைய பல பொருள்களையும் அழைத்திருக்கக்கூடும். நாளடைவில் ஒவ்வொரு பொருளுக்குமெனத் தனித் தனிப் பெயர்கள் ஏற்பட்ட டிருக்கும். அப்படி ஏற்படத் தொடங்கிய பின்னரும், பல பொருள்கட்கும் பொதுவாயிருந்த பொதுப் பெயர் ரும் பேச்சு வழக்கில் நடமாடிக் கொண் டிருந்திருக்கும். பிற்காலத்தில் எல்லாப் பொருள்கட்குமே தனித் தனிப் பெயர்கள் ஏற்பட்டுவிட்டதால், பல பொருள்கட்கும் பொதுவாயிருந்த ஒரு சொல் வகைகள், பேச்சு வழக்கி. லிருந்து படிப்படியாகக் குறைந்து செய்யுள் வழக்கோடு நின்று விட்டன. எனவே, ஒரு சொல் பல் பொருள்கள் மொழியின் தொன்மை நிலையை - தொடக்க நிலையை நினைவு படுத்துவதாக ஒரு கருத்துக்கொள்ளவும் இட முண்டு. இந்தக் கருத்துக்குத் துணையாக, குழந்தைகள் பேசும் மொழியை ஈண்டு ஒப்பிட்டு நோக்குவது, நன்று :

பச்சிளங் குழந்தைக்கு மொழிவளம் - சொல் வளம் கிடையாது. அது தொடக்கத்தில் சில சொற்களையே அறிந்திருக்கும். அந்தச் சில சொற்களைக் கொண்டே மொழி பேசும். பல பொருள்களை அழைக்க ஒரு சொல் லையே பயன்படுத்தும். எடுத்துக் காட்டாக, - அம்மா வைத் தெரியும்; அம்மா என்ற சொல்லையும் தெரியும். எனவே, அம்மா போன்ற வயதுத் தோற்றமுடைய. பிற பெண்களையும் அம்மா என்றழைக்கும். தன் ஆயாவை (பாட்டியைத் தெரியும். ஆகவே, கிழவிகளை

பின்