பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

490

வில்லை யென்றால் தான், அம்மொழியைச் சொல்லேழ்மை யுடையதாகக் குறைத்து மதிப்பிட முடியும். அதிலும், வேறு மொழிகளிலிருந்து தோன்றி வேறு பல மொழி களிலிருந்து சொற்களைக் கடன் வாங்கி வளர்ந்திருக் கிற ஆங்கிலம் முதலிய மொழிகளைப்போ லில்லாது தானே தலைமொழியாய்த் தோன்றி, தன் துணை கொண்டே தன்னில் தானே வளர்ந்திருக்கின்ற தமிழ் மொழியில் சொல்லேழ்மை என்ற குறைக்குச் சிறிதும் இடமேயில்லை.

மிகப் பழம்பெரு மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று - என்ற அளவில் மட்டுமல்ல - உலக மொழி களுக்குள்ளே முதல் முதல் தோன்றிய மொழி தமிழ் மொழியே - என்ற அளவில் ஒரு கொள்கை ஒரு சில ஆராய்ச்சியாளரால் ஆணித்தரமாக நிறுவப்பட்டுள் ளது. அங்ஙனமெனில், மக்களினம் குழந்தை நிலையில் லிருந்த மிக மிகப் பழங்காலத்தில் தோன்றிய உலக முதல் மொழியாகிய தமிழ் மொழியில் ஒரு சொல் பல் பொருள்கள் மலிந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.

இதுகாறுங் கூறியவற்றால், 'ஒரு சொல் பல் பொருள்கள் ' மொழியின் தொன்மை நிலையையும் மொழிச் செட்டையும் குறிப்பதாக நம்பலாம்.

|

ஒரு சொல்லா? பல சொல்லா? ஒரு சொல் பல் பொருள்கள் பற்றி பல்லார்டு (Ballard) என்னும் அறிஞர் பின்வருமாறு ஒரு கருத்து தெரிவித்துள்ளார் : ஒரு சொல்லுக்கு இரு பொருளோ அல்லது பல பொருளோ இருக்க முடியாது; ஒரு சொல் லுக்கு ஒரு பொருள் இருப்பதுதான் இயற்கை ; அப்படி ஒரு சொல்லுக்கு மூன்று பொருள்கள் காணப்படின்,