பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

491

491

அச்சொல்லை ஒரு சொல்லாகக் கொள்ள முடியாது; மூன்று சொற்களாகத்தான் கொள்ள வேண்டும் - என் பதே அவர் கருத்து. அதாவது, 'பல்லார்டு அவர் களின் கருத்தின்படி பார்க்குங்கால், - அரி என்னும் சொல்லுக்குக் கண் என்றும், கடல் என்றும், பொன் என் றும், புகை என்றும் பல பொருள்கள் உள்ளன. எனவே, அரி என்னும் ஒலியை ஒரு சொல்லாகக் கொள்ளாது பல சொற்களாகவே கொள்ள வேண்டும் அதாவது, கண் என்று பொருள்படும் அரி ஒரு தனி அரி ; கடல் என்று பொருள்படுவது இன்னொரு தனி அரி; பொன் என்று பொருள்படுவது வேறொரு தனி அரி; புகை என்று பொருள்படுவது மற்றுமொரு தனி அரி; இன்னும் இப் படியே ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் அரி உள் ளது. எனவே, அரி என்னும் ஒரு சொல்லொலிக்குள் பல அரிகள் புகுந்து கொண்டிருப்பதாகக் கொள்ள வேண்டும். இது 'பல்லார்டு' போன்றவர்களின் கருத்து.

இந்தக் கருத்தில் ஓரளவு உண்மையிருக்கிற தென் றாலும், இதனை முற்றிலும் ஒத்துக்கொள்வதற்கில்லை. எப்படி யென்று காண்பாம் :

ஒரு சொல் பல்பொருள்களை, 'ஓரினம் தழுவி யவை', 'வேறினம் தழுவியவை' என இரு வகையாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். கார் என்னும் சொல்லால் குறிக்கப்படும் கருநிறம், மேகம், மழை, கார்காலம், கார் நெல், கார் நெல் உணவு ஆகிய பொருள்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை யாதலின், இவை ஓரினம் தழுவியவையாகும். இவ்வாறே பிறப் பாலோ, உறுப்பாலோ, இடத்தாலோ, காலத்தாலோ, பண்பாலோ, தொழிலாலோ, ஒப்புமையாலோ, இன்ன

3)