பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

492

பிறவற்றாலோ தொடர்புடைய பொருள்கள் யாவும் ஓரினம் தழுவியவையே! இவ்வாறின்றி, அரி என்னும் சொல்லால் குறிக்கப்படும் கண், கடல், பொன், புகை, குதிரை, குரங்கு, தவளை, வண்டு முதலிய பொருள்கள் ஒன்றோடொன்று ஒருவிதத் தொடர்பும் பெறாத வேறு வேறு பொருள்களானதால், இவை வேறினம் தழுவி யவை எனப்படும்.

இவ்விரு பிரிவுகளுக்குள் வேறினம் தழுவியவற் றிற்கே பல்லார்டு சொன்ன கருத்து பொருந்தும். ஓரினம் தழுவியவற்றுக்கு அக்கருத்து அவ்வளவாகப் பொருந்தாது. ஓரினம் தழுவிய பொருள்களைக் குறிக் கும் சொல் ஏறக்குறைய ஒரு சொல்லே . அது குறிக் கும் பல பொருள்களும் ஒரே மரத்தின் பல பாகங்கள் போன்றவை. ஆனால், வேறினம் தழுவிய பொருளைக் குறிக்கும் சொல்லோ, பல சொற்களின் மதிப்புடையது; அது குறிக்கும் பல பொருள்களும் ஆல், அரசு, அத்தி, வாழை, பலா, பனை, தென்னை முதலிய தனித்தனி மரங்கள் பலவற்றைப் போன்றவை. ஆல், அரசு முதலிய எல்லாமே மரம் என்னும் பொதுப் பெயரால் சுட்டப்படு வதைப்போல, கண், கடல், பொன், புகை முதலிய எல் லாப் பொருள்களுமே அரி என்னும் பொதுப் பெயரால் சுட்டப்படுகின்றன. உண்மை இதுதான்!

மேலெழுந்தவாரியாகப் பார்க்குங்கால் வேறினம் தழுவியவையாகத் தெரியும் சில பொருள்களை ஆழ்ந்து நோக்கின், ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகைத் தொடர்பு பெற்றிருப்பது புலனாகலாம். எடுத்துக் காட் டாக , - அடுதல்' என்னும் சொல் கொல்லுதல், சமைத் தல் ஆகிய இரு பொருள்கள் தருவதும், முதற்கால மக்கள் உயிர்களைக் கொன்று தின்றதனாலும்