பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

494

ஓரினம் தழுவிய வை தோன்றியதற்குரிய பொருட்டு (காரணம் ), மொழியின் தொன்மை நிலையும் மொழிச் சொட்டும் ஆகும் என ஆய்ந்து கண்டோம். இனி, வேறினம் தழுவியவை தோன்றியதற்குரிய பொருட்டு ஆராயப்பட வேண்டும்.

அரி என்னும் ஒரு சொல்லுக்குக் கண் , கடல், பொன், புகை, குதிரை, தவளை முதலிய பல பொருள்கள் உள்ளன. இத்தனை பொருள்களும் ஒன்றுக் கொன்று ஒரு சிறிதும் தொடர்பில்லாதவை. அப்படி யிருக்க, இவ்வளவு பொருள்கட்கும் அரி என்னும் ஒரு பெயர் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? இவ்வினாவிற் குரிய விடை யாது :- இது தற்செயலாய் ஏற்பட்ட அமைப்பே - என்பதேயாகும். அதாவது, - பரந்துபட்ட பழந் தமிழகத்தில் வாழ்ந்த மக்களுள் ஒரு பகுதியினர் தற்செயலாய்க் கண்ணை அரி என்னும் சொல்லால் குறித்திருப்பர்; இன்னொரு பகுதியினர் கடலை அச் சொல்லால் குறித்திருப்பர்; வேறொரு பகுதியினர் பொன்னை அச்சொல்லால் குறித்திருப்பர்; மற்றும் ஒரு பகுதியினர் குதிரையைக் குறித்திருப்பர்; தற்செய் லாய் இவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்த போதோ - அல் . லது - ஒருவரின் எழுத்துப் படைப்பை மற்றொருவர் படித்த போதோ, அரி என்னும் ஒரு சொல் ஒலி பல . பொருள்களைக் குறிக்கத் தங்களால் பயன்படுத்தப்பட் டிருப்பதை அறிந்திருப்பர். பின்னர், அரி என்னும் ஒரு சொல்லுக்கு அத்தனை பொருள்களும் உரியன வாகத் தொகுத்துக் கொண்டிருப்பர். இப்படியாக, வேறினம் தழுவிய ஒரு சொல் பல் பொருள்கள் ஏற்பட்ட டிருக்கலாமன்றோ ?