பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

497

497

இருப்பினும், அது வந்திருக்கிற வாக்கிய அமைப் பைக் கொண்டு, அதற்கு அந்த இடத்தில் எந்தப் பொருள் உரியது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, - 'அடி' என்னும் ஒரு சொல்லுக்கு, அடிக்கிற அடி, அளக்கிற அடி என்பன போலப் பல பொருள்கள் இருப்பினும், முதுகில் நான்கு அடி கொடுத்தார்கள் என்ற தொடரில் அடிக்கிற அடி என்ற பொருளும், அந்தக் கம்பம் பன்னிரண்டு அடி உயரம் உள்ளது என்பதில் அளக்கிற அடி என்ற பொருளும், தாய் தன் குழந்தையின் அடிமுதல் முடி வரை முத்தம் தந்தாள் என்பதில் கால் என்ற பொரு ளும், குடத்தின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருக் கிறது என்பதில் கீழ்ப்பாகம் - கீழ்மட்டம் என்ற பொருளும் ஐயந்திரிபின்றி மிகத் தெளிவாக விளங்கு கின்றன.

இப்படியாக, பல பொருள் தரத்தக்க அடி என்னும் ஒரு சொல்லானது, அடி கொடுத்தார்கள் என்றவிடத் தில் பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டு கின்ற 'கொடுத்தார்கள்' என்னும் வினைச் சொல்லின் துணை கொண்டும், பன்னிரண்டு அடி உயரம் என்ற விடத்தில் பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற உயரம்' என்னும் பெயர்ச் சொல்லின் துணை யாலும், அடி முதல் முடிவரை என்ற விடத்தில் 'முடி என்னும் இனச் சொல்லாலும், குடத்தின் அடியில் கொஞ்சம் தண்ணீர் என்றவிடத்தில் குடம் - கொஞ்சம் ' ஆகிய (சந்தர்ப்பச்) சார்புச் சொற்களாலும் பொருள் விளக்குவதை யறிக. இவ்வாறு எளிதில் தெளிவாகப் பொருள் உணர்த்தும்படியே பேசுபவர்களும் பேச வேண்டும் - எழுதுபவர்களும் எழுத வேண்டும்.