பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

501


கல்வித் துறையில் அகராதிக் கலையின் பங்கு 'சொல்லும் மொழியும்' என்னும் தலைப்புடைய இப் பாகத்தில், சொல் பிறந்த கதையும், சொல் பெருகிய கதையும், சொல்லின் வகையும், ஒரு பொருள் பல்பெயர் களும், ஒரு சொல் பல் பொருள்களும் இதுகாறும் ஆராயப்பட்டன. இனி, கல்வித் துறையில் மொழிப் பாடத்தின் பங்கும், அம்மொழிப் பாடத்தில் சொற் பொருள் விளக்கும் அகராதிக் கலையின் பங்கும் என்ன என்பது குறித்து ஒரு சிறிது ஆய்வாம் :

உலகில் மக்கள் பல்கால் பயின்று கற்றுக்கொள்ள வேண்டிய கலைகள் பல. அவற்றுள் மொழி, தானும் ஒன்று என்ற அளவினதன்றி, தான் முதன்மையான தும் இன்றியமையாததும் ஆகும். மொழியின் துணை கொண்டே பள்ளிகளில் பல கலைகள் பயிலப்படு கின்றன - பயிற்றப்படுகின்றன. கணிதம், வரலாறு, நிலவியல், அறிவியல், அரசியல், உளவியல், மருத்துவம் போன்ற எந்தக் கலையினையும் - எந்தக் கல்வியினையும் மொழியின்றிப் பயிலவோ பயிற்றவோ முடியாதுதானே!

உலகில் உள்ள எந்தக் கலையினையும் முற்றும் பயின்று முடிக்கவியலாது. இதற்கு மொழிக்கலையும் விலக்கன்று. இன்னும் கேட்டால், மற்ற கலைகளினும் மொழிக்கலை மிக்க ஆழமும் அகலமும் உயரமும் உடையதாகும். எப்படி? எல்லாக் கலைகளையும் ஒரு