பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

502

மொழி பெற்றிருக்குமாயின், அதாவது, எல்லாக் கலை களும் ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்குமாயின், அம் மொழியின் கன அளவு மிகுதி என்பது தெளிவு.

ஒருவர் தமிழோ - பிரஞ்சோ - ஆங்கிலமோ - ஏதோ ஒரு மொழி கற்றிருக்கிறார் என்றால், அம் மொழியில் எழுதப்பட்டுள்ள எல்லாக் கலை நூற்களையும் கற்றிருக் கிறார் என்று பொருள் இல்லை. ஒருவரே அனைத்தையும் கற்கவும் முடியாது. ஆனால், ஒருவர் ஒரு மொழியில் உள்ள இலக்கண இலக்கியச் செய்யுள் உரைநடை களைப் பரந்த அளவில் பயின்றிருப்பாராயின் - அதா வது தேர்ந்த மொழிப் புலமை பெற்றிருப்பாராயின், அப் புலமையின் துணைகொண்டு, அம்மொழியில் எழுதப் பட்டுள்ள ஏனைய கலை நூற்களையும் ஒருவாறு படித்துப் புரிந்து கொள்ளலாம். ஒரு கலை வல்லார் அக்கலை பற்றித் தெளிவாக விளக்கமாக நூல் எழுதின், அக் கலை நூலினை , மொழி வல்லார் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே கட்டாயம் புரிந்துகொள்ள முடியும். இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் தரமுடியும். இதனை மேலும் ஆய்வாம்:

இந்தக் காலத்தில் தமிழோ பிரஞ்சோ ஆங்கிலமோ படித்துப் பட்டம் பெற்றிருக்கும் சிலரிடம் சென்று, அவர்கள் படித்த மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலைக் காட்டி அதில் ஏதேனும் ஐயம் கேட்டால், 'நான் இது படிக்கவில்லை, அது தான் படித்தேன் - அது படிக்கவில்லை, இதுதான் படித்தேன்' என்று ஏதேதோ சொல்லி அவர்கள் தப்பித்துக் கொள்ள முடிகிறது. இத் தகைய பதில், அவரைப் போன்ற படிப்பாளிகட்கு ஆறுதல் அளிக்கலாமே தவிர, எளிய மக்களுக்கு மன நிறைவு அளிக்க முடியாது. 'என்னவோ படித்தவர்