பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

507

507

நம் நாட்டில் தமிழ்முறைக் கல்வி படிப்படியாகக் குறைய ஐரோப்பிய முறைக் கல்வி வன்மையாக நிலை யூன்றியது. ஐரோப்பியர்களுடன் வந்த அகராதிகள் நிகண்டுகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. நிகண்டுகளின் துணைகொண்டு அருஞ்சொற்கட்குப் பொருள் கண்டுவந்த நம் மக்கள், அகராதிகளின் துணைகொண்டு பொருள் காணத் தொடங்கிவிட்டனர். ஏன் இப்படி? இங்கே சில உண்மைகளை நாம் மறைக் கவோ மறுக்கவோ கூடாது. அவையாவன :

நிகண்டுகள் செய்யுள் நடையில் இருந்ததாலும், முயன்று வருந்தி நெட்டுருச் செய்யவேண்டியிருந்ததா லும், அகர வரிசையில் இல்லாமையாலும், அந்நிகண்டு களைப் பயன் படுத்துவதனினும், செய்யுள் நடையில் இல்லாமல் சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக அகர வரிசையிலுள்ள அகராதிகளை வருந்தி முயன்று நெட்டுருச் செய்யாமல் வேண்டியபோது எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது மக்களுக்கு எளிதாயிருந் தது. அதனால் தான் நிகண்டுகளை அகராதிகள் வென்றுவிட்டன.

மேலும், கல்வித் துறையில் புத்தியக்கங்கள் பல தோன்றத் தொடங்கின. அவற்றுள் ஒன்று உளவியல் முறையில் (Psychological Method) கல்வி கற்பிப்பதாகும். அதாவது, - குழந்தைகளின் உள்ளங்கள் எப்போதும் இன்பச் சுவையினையே விரும்புகின்றன; எளிமையும் விளையாட்டும் அவர்தம் தனியுரிமைகள் ; எனவே, குழந்தையுள்ளங்களின் இயல்பைப் புரிந்துகொண்டு அவ்வுள்ளங்கட்கு ஏற்ப எளிய முறையில் - விளையாட்டு முறையில் இன்பமான முறையில் கல்வி கற்பிக்க

32