பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

509

509

வாழ்க்கையில் கற்கவேண்டிய கலைகளோ பற்பல உள்ளன. பல கலைகள் இன்றி, ஏதேனும் ஒரு கலையைக் கற்கவேண்டுமென்றாலுமே, அஃதொன்றுமே மிகமிக ஆழ்ந்து அகன்று நீண்டு பரந்த ஒரு மாபெருங் கடலாகக் காணப்படுகிறது. இந்நிலையில் மூளைக்கு எவ்வளவுதான் வேலை கொடுப்பது? வேண்டியபோது அகராதியை எடுத்துப் புரட்டிச் சொல்லுக்குப் பொருள் தெரிந்து கொண்டு போவதைவிட்டு, நிகண்டுப் பாடல் களை வீணே ஏன் நெட்டுருப் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும்? இதனால் மூளைக்குத் தேவையற்ற தொல்லை தானே? காலமும் முயற்சியும் ஒருசேர வீணன்றோ ? இந்த நேரத்தில் - இந்த முயற்சியில் வேறொன்றைக் கற்கலாம் அல்லது வேறொரு வேலை செய்யலாமே! எனவே எப்படி நோக்கினும், நிகண்டுக் கல்வியினும் அகராதிக் கல்வியே எளியது - செட்டானது - பயனுள் ளது ஆகும்!

இதுகாறும், நிகண்டுப் பயனினும் அகராதிப் பயனே சிறந்தது என்பவரது கூற்று பல கோணங்களில் வற்புறுத்தப்பட்டது. இங்கே இக்கொள்கைக்கு எதிர்ப் பாக, அகராதிப் பயனினும் நிகண்டுப் பயனே நூற் றுக்கு நூறு உயர்ந்தது என்று கச்சை கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்க முடியாதென்றாலும், நிகண் டுக் கல்வி முறையில் இருந்து வந்த பெரும் பயனை எடுத்துக் கூறாமல் விடமுடியாது.

நிகண்டுப் பாடல்களை வலிந்து முயன்று நெட்டுருப் பண்ணுவது உளவியல் முறைக்கு ஏற்றதன்று என்று இக் காலத்தில் கருதப்படினும், அக்காலத்திலோ நிகண்டுப் பாடல்களை என்றென்ன - வேறு பன்னூற்