பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

510

பாடல்களையும் பரவலாக உருப்போடுவது எளிய பழக்க மாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நிகண்டுப் பாடல்கள், பகவனே யீசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் " -- என்பதுபோல இசையோடு முறை போட்டு மாணாக் கர்களால் பயிலப்பட்டுவந்ததால் அவர்தம் உள்ளங்களில் எளிதில் பதிந்து வேரூன்றி விட்டன. அதனால், நிகண்டு. கற்றவர்கள், சொந்தக் கையிருப்பில் நிரம்பப் பணம் வைத்திருப்பவர்கள் வேண்டிய போதெல்லாம் - வேண் டியபடி யெல்லாம் எடுத்துச் செலவு செய்வதைப்போல, எந்த நூலையும் எந்தப் பாடலையும் பெரும்பாலும் பிற ருதவி தேவையின்றியே எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கே ஒரு திருக்குறள் நினைவிற்கு வருகிறது : யானையும் யானையும் போரிடு' வதை மலையுச்சியில் நிற்பவன் அச்சமோ அயர்வோ இன்றி நன்கு காண முடியுமாறு போல, தன் கையில் சொந்த உடைமையாக நிரம்பப் பொருள் வைத்திருப்ப வன் எந்த வினையையும் தன் விருப்பம் போல் முட் டின்றி முடிக்க முடியும் என்னும் கருத்துடைய,

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை. என்னும் திருக்குறள் தான் அது. இந்தக் குறட் கருத்தை நிகண்டுக் கல்விக்கும் பொருத்திக்கொள்ள லாம். பொருள் வைத்திருப்பவருக்கு நேர் - நிகண்டு கற்றவர்; பொருள் உடையவர் எந்த வினையையும் எளிதில் செய்வதற்கு நேர் - நிகண்டு கற்றவர் எந்த நூலையும் எளிதில் புரிந்து கொள்ளுதல். இங்கே, குறளிலுள்ள 'தன் கைத்து' என்னும் தொடரை ஊன்றி நோக்க வேண்டும். பிறர் கைப் பொருள் - ஏன் - தன் கையில் இல்லாமல் வேறிடத்தில் இருக்கும் தன்