பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

511

511

பொருளேகூட தான் விரும்பியவாறு வினை செய்வதற் குத் தக்க நேரத்தில் உதவாமற்போகலாம். அகராதிப் பயனும் இதுபோன்றதுதான். திடீரென ஓரிடத்தில் ஒரு நூலை - ஒரு பாடலைப் படிக்க நேர்ந்தபோது சில சொற்கள் புரியவில்லையென்றால், இனி அகராதி தேடி - சொல்தேடி - பொருள் தேடிப் புரிந்து கொள்ள வேண்டும். செல்லு மிடமெல்லாம் அகராதி மூட்டை யைச் சுமந்து திரிய முடியுமா? நிகண்டுப் பயனோ இது போன்ற தன்று. நிகண்டு மூட்டை தலைக்கு மேலே அல்ல - தலைக்கு உள்ளே பொருத்திவைக்கப்பட் டுள்ளது. அதனால், வேண்டியதற்கெல்லாம் வேண்டிய போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவேதான், நிகண்டு கற்றவர்கள் மொழித் துறையில் (கிங்காங் - தாராசிங் போன்ற) மாமல்லர்களாகத் திகழ்ந்தார்கள். அக்கால நிகண்டுப் பயனுக்கும் இக் கால அகராதிப் பயனுக்கும் உள்ள வேற்றுமை இப் போது எளிதில் புலனாகுமே.

வேறிடத்துப் பொருள் போன்றது அகராதி; தன் கைப் பொருள் போன்றது நிகண்டு. மலர்கள் தனித் தனியே உதிர்ந்து கிடப்பது போன்றது அகராதி ; தொடுத்த மலர்மாலை போன்றது நிகண்டு. ஐந்து காசு - பத்துக் காசு பணச் சில்லறை போன்றது அகராதி ; பத்து உரூபா - நூறு உரூபா பணத்தாள் போன்றது நிகண்டு. இப்படியாக, அகராதிக் கல்வி முறையினை யும் நிகண்டுக் கல்வி முறையினையும் பல கோணங் களில் ஒற்றுமை வேற்றுமைப் படுத்திப் பார்க்குங் கால், அகராதி முறையின் மாபெரும் பயனை யாரும் மறுக்கமுடியாதென்றாலும், அதேநேரத்தில் நிகண்டு முறையின் பெரும் பயனையும் யாரும் மறைக்க முடியாது.