பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

49



“வடவேங்கடத் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந் தொகுத் தோனே போக்கறு பனுவல்;
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்
தறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே”.

என்னும் பாயிரப் பாடலானும் ஓரளவு அறியலாம்.

தொல்காப்பியக் காலம்

தொல்காப்பியரது காலத்தைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்துவதற்குரிய அகச்சான்று யாதொன்றுமிலது. நம் முன்னோர்கள் முறையாக வரலாற்றை எழுதி வைக்காததால் நேர்ந்த பெருங்குறையேயிது. இதனால், பெரும்பாலான மன்னர்கள், புலவர்கள் முதலியோர்தம் காலத்தை இன்னமும் சரியாக வரையறுத்துக்கூற முடியவில்லை. காலவாராய்ச்சி ஓரளவு உய்த்துணர்வின் வாயிலாகவே செய்யப்படுகிறது. இந்நிலையில் தொல்காப்பியக் காலமும் உய்த்துணர்ந்தே (யூகித்தே) உரைக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய கடைச் சங்கப் புலவர்களேயன்றி, அதற்கும் முன் தோன்றிய இடைச் சங்கப் புலவர்களும் இந்தத்-