பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

51



காரத்திலுள்ள மரபியல் என்னும் பகுதியிலும் சொற் பொருள் கூறும் அகராதிக் கூறு அமைந்துள்ளது. இனி முறையே அம்மூன்று இயல்கள் குறித்து ஆய்வாம்:—

இடையியல் :

இடையியலில், மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மற்றையது, மன்ற, தஞ்சம், அந்தில், கொல், எல், ஆர், குரை, மா, மியா, இக, மோ, மதி, இகும், சின், அம்ம, ஆங்க, யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, ஆக, ஆகல், என்பது, ஔ, எனா, என்றா, ஒடு—முதலிய இடைச்சொற்கட்கு உரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சில இடைச்சொற்களின் பொருள்கள் வருமாறு:–

‘கொன்’ என்னும் இடைச்சொல், அச்சம், பயன் இல்லாதது, காலம், பெருமை என்னும் நான்கு பொருள் உடையதாம்:

“அச்சம், பயமிலி, காலம், பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.”

என்பது தொல்காப்பிய நூற்பா. ‘மன்ற’ என்னும் சொல்லுக்குத் தேற்றம் (தெளிவு) என்று பொருளாம். ‘தஞ்சம்’ என்னும் சொற்கு எண்மை (எளிமை) என்று பொருளாம். ‘கொல்’ என்னும் சொற்கு ஐயம் (சந்தேகம்) என்று பொருளாம்: