பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/57

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

53



“குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே.”

“செல்லல் இன்னல் இன்னா மையே.’’

என்பன நூற்பாக்கள். மேலும் சில சொற்பொருள் அறிவிக்கும் நூற்பாக்கள் வருமாறு:–

“மல்லல் வளனே.” (மல்லல்—வளம்)

“மழவும் குழவும் இளமைப் பொருள.”

“சீர்த்தி மிகுபுகழ்.”

“மாலை இயல்பே.”

“கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்.” (உள்ளது சிறத்தல்—Evolution)

“கதழ்வும் துனைவும் விரைவின் பொருள.”

“தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்.”

“தடவும் கயவும் நனியும் பெருமை.”

“பழுது பயம் இன்றே.” (பயம்—நன்மை)

“முழுது என்கிளவி எஞ்சாப் பொருட்டே.”

“வம்பு நிலையின்மை.”

‘'மாதர் காதல்.”

“புலம்பே தனிமை.”

“வெம்மை வேண்டல்”. (விருப்பம்)

“வறிது சிறிது ஆகும்.”

“ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்.”

“பையுளும் சிறுமையும் நோயின் பொருள.”

“எய்யாமையே அறியாமையே.”

“தெவ்வுப் பகையாகும்.”

“செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.”