பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/58

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54



“விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.”

“கருவி தொகுதி.” (கூட்டம்)

“இலம்பாடு, ஒற்கம் ஆயிரண்டும் வறுமை;”

“பே, நாம், உரும் என வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.”

“வாள் ஒளியாகும்.”

“உசாவே சூழ்ச்சி.” (ஆலோசனை)

“வயா என்கிளவி வேட்கைப் பெருக்கம்.”

“கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.”

“புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி.” (யாணர்-புதுவருவாய்)

“யாணுக் கவினாம்.” (யாணு—அழகு)

“ஐ வியப்பு ஆகும்.”

“வையே கூர்மை.”

“எறுழ் வலி ஆகும்.”

மேலுள்ள நூற்பாக்களில் பல வளமான அரிய அழகிய புதிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் கண்டோம்; அரிய சொற்கட்கிடையே தீர்தல், தீர்த்தல், பழுது, முழுது, செழுமை ஆகிய எளிய சொற்களையும் கண்டோம்; நமக்கு எளியனவாகத் தோன்றும் இச்சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் அரியனவாகக் கருதப்பட்டன போலும். மற்றும், தொல்காப்பியர் ‘கடி’ என்னும் ஓர் உரிச் சொல்லுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்:–