பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/60

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56



தொல்காப்பியர் உரியியலில் நூற்றிருபது சொற்களையும் அவற்றிற்குப் பொருளாகப் (அர்த்தமாகப்) பல சொற்களையும் கூறிவிட்டு, இறுதியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

“எடுத்துக் கூறியுள்ள சொற்களைப் புரிந்து கொள்வதற்காக அவற்றின் பொருள்களாகச் சொல்லப்பட்டுள்ள சொற்களும் சிலருக்குப் புரியவில்லையென்றால், அவற்றிற்கும் நான் பொருள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது; அப்படிச் சொல்வதானால் அதற்கு எல்லையேயிராது; எனவே, ஒருவனுக்கு ஒரு சொல்லும் அதன் பொருளும் புரியவில்லை என்றால், அவனுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர், நன்றாகத் தெரிந்த வேறு ஓர் எளிய சொல்லின் துணைகொண்டோ அல்லது — கண்ணுக்குத் தெரியும் ஓர் உருவப்பொருளைக் காட்டி அதன் துணைகொண்டோ விளக்கலாம். ஆசிரியர் எவ்வளவுதான் முயன்று உணர்த்தினும், கற்பவரின் உணரும் ஆற்றலையும் பொறுத்தே பொருள் புலப்பாட்டில் வெற்றி கிடைக்கும்.”—என்று தொல்காப்பியர் மொழிந்துள்ளார். இதனை,

“பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம் பின்றே”.

“பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்.”

“உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே”.

என்னும் உரியியல் நூற்பாக்களால் உணரலாம். இக்காலக் கல்வியில் சொல்லுக்குப் பொருள் கூறும் முறைபற்றிப் பயிற்று முறை (போதனாமுறை) நூற்களுள் பல வழிகள் கூறப்பட்டுள்ளன; அவற்-