பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/64

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60

இன்னின்ன பறவை - விலங்குகளோடு இன்னின்ன மரபுப் பெயர்களைச் சேர்த்துச் சொல்ல வேண்டும் எனத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருப்பவற்றுள் பல வழக்காறுகள் இக்காலத்தில் இல்லை. எனவே, மேலுள்ள தொல்காப்பிய நூற்பாக்களைப் படிக்கும்போது நமக்கு வியப்பும் வேடிக்கையும் தோன்றுகின்றன. மற்றும், மரபியலில் மரம் - புல்வகைகளைப்பற்றியும் சில செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளி வயிரம் உடையது 'புல்' எனப்படுமாம். உள் வயிரம் உடையது மரம் எனப்படுமாம். தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு குலை முதலியன புல்லின் உறுப்புக்களாம். இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, கனை, முதலியன மரத்தின் உறுப்புக்களாம்: "புறக் காழனவே புல்லெனப் படுமே." "அகக் காழனவே, மரமெனப் படுமே.” "தோடே, மடலே, ஓலை என்றா ஏடே, இதழே, பாளை என்றா ஈர்க்கே, குலையே நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்." "இலையே, முறியே, தளிரே, தோடே சினையே, குழையே, பூவே, அரும்பே, நனையே, உள்ளுறுத் தனையவை யெல்லாம் மரனெடு வருஉங் கிளவி யென்ப.” என்பன நூற்பாக்கள். இச்சொல் வளங்களை அறியும்போது உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்கின்றதன்றோ தோடு, மடல், ஒலை, ஏடு, இலை, முறி