பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/69

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

65

65

அறிவித்துள்ளனர்' என்றெல்லாம் பலவிடங்களில் தொல்காப்பியரே கூறியிருப்பதை நோக்கின், தொல்காப்பியத்திற்கு முன்பே பெரு நூல்கள் பல தோன்றியிருந்தமை புலனாகும்; ஆகவே, தமிழின் தொன்மைக்கு எல்லையேயில்லை என்பது தெளிவு. தோன்றியிருந்த பெரு நூல்கள் எங்ஙனமோ அழிந்துபோக, தொல்காப்பியம் ஒன்றே நிலைத்து நின்றதால் அதனையே பின்வந்த தமிழ்ப் புலவோர் பலரும் போற்றிக் கையாண்டனர். இடைச் சங்கத்திலும் கடைச் சங்கத்திலும் தொல்காப்பியமே ஆட்சி செலுத்தியது. தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றியே அனைவரும் நூல் இயற்றினர். படித்தவர்கள் என்றால், அவர்கள் தொல்காப்பியம் படிக்காமல் இருந்திருக்க முடியாது.

தொல்காப்பியத்தின் ஆட்சியும் மாட்சியும் பெருகவே அதற்கு உரைகள் பல தோன்றின. ஒரு நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைகளின் எண்ணிக்கை அதன் ஆட்சிக்கும் மாட்சிக்கும் தக்க சான்றூகும். தொல்காப்பிய நூலுக்கு இளம்பூரணர், பேராசிரியர் கல்லாடர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், சிவஞான முனிவர் முதலிய பழம்பெரும் புலவர்கள் இயற்றியுள்ள உரைகள் தரம் நிறைந்தவை. பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டுகளில் தோன்றிய பேரறிஞர்கள் சிலரும் தொல்காப்பியத்திற்கு உரை வகுத்துள்ளனர். இஃதன்றி, வேறு சில நூற்களின் உரையிலும் தொல்காப்பிய நூற்பாக்கள் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எட்டாம் நூற்றாண்டில் சேந்தன் திவாகர நிகண்டு இயற்றிய திவாகர முனிவரும், பதின் மூன்றாம் நூற்றாண்டில்