பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

67

தொல்காப்பியம் போன்ற இலக்கண நூற்கள் பலவும், சேந்தன் திவாகரம் போன்ற நிகண்டு நூற்கள் பலவும் கட்டாயம் தோன்றியிருக்கத்தான் வேண்டும். நமது தீப்பேறாக அவையெல்லாம் கிடைக்கவில்லை ஆயினும், நிகண்டு (கலைக் கோட்டுத் தண்டு), ஆதி திவாகரம் என்னும் இருநிகண்டு நூற்களின் பெயர்கள் மட்டும் தெரிகின்றன; நூற்கள் கிடைத்தில. அவற்றுள் முதலில் நிகண்டு கலைக்கோட்டுத் தண்டு என்னும் நூல் பற்றிய குறிப்பு வருமாறு.


நிகண்டு (கலைக் கோட்டுத் தண்டு)

நன்னூல் என்னும் இலக்கண நூலின் பாயிரப் பகுதியில் நூற்கட்குப் பெயர் வைப்பதற்குரிய பல பொருட்டுக்கள் (காரணங்கள்) சொல்லப்பட்டுள்ளன; இறுதியில், இடுகுறியாகப் பெயர் வைப்பதும் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. இடுகுறி என்றால், ஒரு பொருட்டும் (காரணமும்) இன்றி, ஏதாவது ஒரு பெயர் வைத்துத் தீரவேண்டுமே என்பதற்காக இடப்பட்ட பெயர் ஆகும். நமக்கு ஒரு பொருளினது பெயரின் பொருட்டுத் தெரியவில்லையென்றால், அதை இடுகுறிப் பெயர் என்று சொல்ல வேண்டியதுதான் போலும்! இது பற்றிய நன்னூல் நூற்பா வருமாறு:—

“முதனூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்
இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே.”

இந்நூற்பாவிற்கு உரையெழுதிய மயிலை காதர் என்னும் உரையாசிரியர், முதனூல்,