பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

69



அறிமுகமாகியுள்ளார். நற்றிணைக்குப் பின்னத்தூர். அ. நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரை நூற் பதிப்பின் முற்பகுதியில், பாடினோர் வரலாறு என்னும் தலைப்பில், நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் பற்றிப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:—

“மான் கொம்பை நிமிர்த்திக் கைக் கோலாகக் கொண்டமையால் இவர் கலைக் கோட்டுத் தண்டன் எனப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரென்று தெரிகிறது; அதுவே கலைக் கோட்டுத் தண்டு எனப்படுவது. இதனை இடுகுறிப் பெயரென்று கொண்டார். களவியலுரைகாரும் நன்னூல் விருத்தியுரைகாரும்(சூத் 49). அஃது இதுகாறும் வெளிவந்திலது. இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்றிணை 382-ஆம் பாட்டு.”

இந்தப் பகுதி அப்படியே ‘அபிதான சிந்தாமணி’ என்னும் நூலிலும் உள்ளது. ‘கலைக் களஞ்சியம்’ என்னும் நூலிலோ பின்வருமாறுள்ளது:—

“நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார்: சங்ககாலப் புலவர் நிகண்டு, கலைக் கோட்டுத் தண்டு என்பவை இடுகுறியாற் பெயர் பெற்ற நூல்களென நன்னூல் விருத்தியுரை (நன். பாயிரம்: 49) கூறும். இந்த நூல்களுக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்புண்டோ என்பது ஆராயத்தக்கது. (நற். 382).”

மேலே எடுத்துக்காட்டப்பட்டவற்றுள் நன்னூல் உரையும் களவியல் உரையும், ‘நிகண்டு நூல் என்பது ஒரு தனி நூல்; கலைக் கோட்டுத் தண்டு என்பது