பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/74

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70



மற்றொரு தனி நூல்’ என்னும் பொருள்பட உள்ளன. அபிதான சிந்தாமணி, நற்றிணை உரையின் முற்பகுதி ஆகியவையோ, ‘நிகண்டு என்பதும் கலைக் கோட்டுத் தண்டு என்பதும் ஒரே நூல்தான்—அதாவது—கலைக் கோட்டுத் தண்டு என்பது ஒரு நிகண்டு நூல்’ என்னும் கருத்துப்படக் கூறியுள்ளன. இவ்விரு வேறு கருத்துக்களுள் எது உண்மையானது?

நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்பது ஒரு புலவரைச் சுட்டுவதால், அவர் நிகண்டு நூல் என ஒரு நிகண்டு நூலும், கலைக் கோட்டுத் தண்டு என ஒரு நிகண்டு நூலுமாக இரண்டு நிகண்டுகள் எழுதியிருக்கமாட்டார்; அல்லது, இரண்டும் ஒரே நிகண்டு நூலாகவும் இருக்க முடியாது. நிகண்டன், கலைக் கோட்டுத் தண்டன் என்னும் இரண்டு ஆண்பாற் பெயர்களின் முடிபைக் கொண்டு, இரண்டும் தனித் தனி நூற்களே என்று துணியலாம். அப்படியிரண்டும் வெவ்வேறு நூற்களின் பெயர்களேயெனின், நிகண்டு என்பது நிகண்டுத் துறை நூலாகவும், கலைக் கோட்டுத் தண்டு என்பது வேறு துறை நூலாகவுந்தான் இருக்க வேண்டும்; ஒருவரே இரண்டு நிகண்டு நூற்கள் எழுதியிருக்கமாட்டார்.

இதில் இன்னுமொரு சிக்கல் உள்ளது:— கலை என்றால் மான்: கோடு என்றால் கொம்பு; தண்டு என்றால் தடி; எனவே, மான் கொம்பை நிமிர்த்தித் தடியாக ஊன்றிச் சென்றதனால் கலைக் கோட்டுத் தண்டனர் என ஆசிரியர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்—என்னும் கருத்துப்பட நற்றிணையுரையின் முற்பகுதியும் அபிதான சிந்தாமணியும் கூறுகின்றன. இதன்படி நோக்கின், கலைக் கோட்டுத் தண்டனார்