பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/76

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72



அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே”

இப்பாடலிலுள்ள ‘தொடித்தலை விழுத்தண்டு’ என்னும் தொடர் கவனிக்கற்பாற்று. புலவர் ஊன்றிய தண்டு (தடி) விழுத் (பெரிய) தண்டாம்; அதன் தலையில் (உச்சியில்) தொடி (பூண்) போடப்பட்டுள்ளதாம்; அதனால் புலவர் தமது தடியைத் ‘தொடித்தலை விழுத்தண்டு’ என்று விதந்து கூறியுள்ளார். இப்பாடலில் ‘தொடித்தலை விழுத் தண்டு’ என்னும் தொடர் கவர்ச்சியுடையதாகக் காணப்படுவதால் இத்தொடராலேயே தொடித்தலை விழுத் தண்டினார் எனப் புலவர் அழைக்கப்பட்டார். இது போலவே, குறுந்தொகை என்னும் சங்கநூலில் ஒரு பாடலில் ‘அணிலாடு முன்றில்’ என்னும் தொடர் சிறந்து காணப்பட்டதால் அப்பாடலைப் பாடிய புலவர் ‘அணிலாடு முன்றிலார்’ என அழைக்கப்பட்டார்; இன்னொரு பாடலில் ‘ஓர்இல் பிச்சை’ என்னும் தொடர் சிறந்து காணப்பட்டதால் அப்பாடலைப் பாடியவர் ‘ஓரில் பிச்சையார்’ என அழைக்கப்பட்டார்; மற்றொரு பாடலில் ‘ஓர் ஏர் உழவன்’ என்னும் தொடர் .சிறந்து தோன்றியதால் அதன் ஆசிரியர் ‘ஓர் ஏர் .உழவனார்’ என அழைக்கப்பட்டார். இவ்வாறே தாம் பாடிய பாடலிலுள்ள தொடரால் பெயர் பெற்ற சங்கப் புலவர்கள் இன்னும் பலருளர். இது அக்காலத்து மரபு; அதாவது, ஒரு பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லையென்றால், அப்பாடலிலுள்ள சிறந்த தொடரால் ஆசிரியரை அழைப்பது அக்கால வழக்கம். இம் மரபையொட்டிக் கலைக் கோட்டுத்