பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/89

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

85

85

நிகண்டினைப் பன்னிரண்டு தொகுதிகளாக அமைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும், நன்றி பாராட்டும் வகையில், சேந்தனைப் புகழ்ந்து பாடியுள்ளார். அவற்றினின்றே மேற்கூறிய செய்திகள் திரட்டித் தரப்பட்டன. அப்பாடற் பகுதிகள் முதல் தொகுதி தொட்டு முறையே வருமாறு:

1. “வடநூற் காசன் தென்தமிழ்க் கவிஞன் கவியரங் கேற்றும் உபயகவிப் புலவன் செறிகுணத்து அம்பற் கிழவோன் சேந்தன்”. 2. "கற்ற நாவினன் கேட்ட செவியினன் முற்ற உணர்ந்த மூதறி வாளன் நாகரிக நாட்டத் தாரியன் அருவந்தை தேறுங் காட்சிச் சேந்தன்”. 3. "காதலி கையிற் போதிப் பெருந்தவன தெவ்வடு கால வைவேல் எழிலி அவ்வை பாடிய அம்பற் கிழவன் தேன்தார்ச் சேந்தன்". 4. "நாடே பிறர் நாட்டிற் குவமை, ஆறே காலம் அறிந்துதவும் காவிரி தானே ஆடவர் திலகன் அம்பல் மன்னன் ஈடிசைத் தலைவன் அருவந்தைச் சேந்தன் ஆய்ந்த திவாகரத் தரும்பொருள் விளங்கும்". 5. "ஒருவற் கொருவன் ஆகி உதவியும் பரிசில் மாக்கள் பற்பல ராயினும் தானுெரு வன்னே தரணி மானவன் செந்தமிழ்ச் சேந்தன் தெரிந்த திவாகரம்". 6. “வருதற் கங்கை வடதிசைப் பெருமையும் தென்திசைச் சிறுமையும் நீக்கிய குறுமுனி குண்டிகைப் பழம்புனல் காவிரிப் பெரும்பதி அம்பற் கதிபதி சேந்தன்".