பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/94

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90

பாடலில், சிறிது வேற்றுமையுடன், கிட்டத்தட்ட இதே மாதிரியில் ஒர் அரசன் பேசப்பட்டுள்ளான். அப்பாடலின் அடியில், அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனர் பாடியது என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்பாடல் வருமாறு:—

“வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்பப்
புலரி விடியற் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றினும் இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட் டருளி
வறன்யான் நீங்கல் வேண்டி என்னரை
நீனிறச் சிதாஅர் களைந்து
வெளியது உடீஇஎன் பசிகளை ந் தோனே
காவிரி யணையுந் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல் வசைப் பட்ட
ஓங்கல் வானத் துறையினும் பலவே.”

[அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனர் பாடியது.]

“காவிரி பாயும் கழனி சூழ்ந்த அம்பர் என்னும் ஊரின் தலைவனாகிய அருவந்தை என்பான், எனக்கு நல்ல உடையும் உணவும் அளித்து என் வறுமையைப் போக்கினான்; அவன் நீடுழி வாழ்க!” என்பதுதான் மேலுள்ள புறநானூற்றுப் பாடலின் சுருக்கமான கருத்தாகும். . . . .

இந்தச் சூழ்நிலையை வைத்துக் கொண்டு, புறநானூற்றில் சொல்லப்பட்டிருப்பவனும் திவாகரத்தில் சொல்லப்பட்டிருப்பவனும் ஒருவனே என்று சிலர்