பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

இல்லையன்றே? தமிழ் நாட்டோடு தொடர்பு கொள்ளாத ஏனைய உலக மன்னர்களைப் பற்றித் திவாகர நிகண்டு பேசவில்லையன்றோ?

சாளுக்கிய மன்னர்கள் தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்டது ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளிலாகும், புலிகேசி, விக்ரமாதித்யன் முதலிய சளுக்கிய குல மன்னர்கள், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டையாண்ட பல்லவ குல மன்னர்களோடு போரிட்டதாக வரலாறு கூறுகின்றது. எனவே, சளுக்கிய மன்னர்களைப் பற்றியும் கூறும் திவாகரம் ஏழாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகத்தான் இருக்கவேண்டும். ஏறக்குறைய எட்டாம் நூற்றாண்டில் திவாகரம் தோன்றியிருக்கக்கூடும் என்று கூறலாம். அப்படியென்றால், சேந்தனும் திவாகரரும் எட்டாம் நூற்றாண்டினர் என்பது பெறப்படும்.

ஆனால், திவாகரம் மூன்றாம் தொகுதிப் பாடலில் 'அவ்வை பாடிய அம்பற் கிழவன்' எனத் திவாகரரால் சேந்தன் சிறப்பிக்கப் பெற்றிருப்பதைக் கொண்டு, 'அவ்வையார் சங்க காலத்தவர்; அவரால் பாடப் பெற்ற சேந்தனும் சங்க காலத்தவன்; எனவே சேந்தன் திவாகரமும் சங்க காலத்தது', என்று சிலர் கூறக்கூடும். இது பொருந்துமா? அவ்வையாரைப் பொறுத்தமட்டில் எதையும் துணிந்து கூறுதற்கில்லை. அவ்வை என்ற பெயரை வைத்துக் கொண்டு திட்டவட்டமாகக் கால ஆராய்ச்சி செய்துவிட முடியாது. ஏன் எனில், கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாற்றைப் புரட்டிப் பார்க்குங்கால், அவ்வையார் என்னும் பெயரில் பல காலத்தில் பலர்