பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

இருந்ததாகத் தெரிகிறது. இருபதாம் நூற்றாண்டுச் சினிமா-நாடக அவ்வையாரோ, பழைய அவ்வையார்கள் பலரும் சேர்ந்த கதம்ப அவ்வையாராகக் காட்சியளிக்கின்றார். எனவே, திவாகரர் கூறியுள்ளபடி சேந்தனைப் பாடிய அவ்வையார் எந்த அவ்வையாரோ? அவர் சங்க கால அவ்வையாரே என்று எப்படித் துணிந்து கூறமுடியும்? இடைக் கால அவ்வையாராக இருக்கலாமே!

எனவே, சேந்தனும் திவாகரரும் ஒருதோற்றம் எட்டாம் நூற்றாண்டினராவர். கால ஆராய்ச்சிக்காகவே புறநானூற்றுப் பாடலை இங்கே இழுத்துப் போட்டு இவ்வளவு நேரமும் முயற்சியும் செலவிட வேண்டியதாயிற்று.