பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே.சண்முகம்

❖9


வேண்டிய அவசியம் நேரிட்டபோது, அந்தக் கருத்துக் களையெல்லாம் அழித்து ஒழிக்கிற முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் விளைவாகப் பழமைக் கருத்துக்கள் அல்லது மூடக் கருத்துகளை எதிர்ப்பது என்ற பெயரில் அந்தக் காலத்தில் தோன்றிய நமக்கு முன்னோடிகளாக வாழ்ந்த, இன்றைய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தந்த பல பெரியவர்களையும் மறந்துவிடுகிற சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிட்டது.

மேலும், பழைய தமிழ் நாடக முறைகள் புதிதாக உருவெடுத்தபோது, புதிய நாடகங்கள் வருவதற்கு அடிப் படையாக அமைந்தவர்களை நாம் மறந்துவிட்டோம் மாற்றங்கள் என்ற பெயரால் - புதிய சிந்தனைகள் என்கிற பெயரால் அவர்களையெல்லாம் மறந்தது மட்டுமல்ல, நினைக்கத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணம்கூடப் பலருக்கு ஏற்பட்டுவிட்டது

ஆனால் அவர்களைப் போன்றவர்கள் இல்லையானால் நாம் இல்லை நம்முடைய திறமைகளும் இல்லை அதன் காரணமாக ஏற்பட்டிருக்கிற வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்கிற உண்மை புதைந்து போய்விட்டது அந்தச் சூழ்நிலையில் தன்னுடைய நாடக ஆசிரியராக விளங்கிய - எல்லா ஆற்றலையும் பெற்றிருந்த தமிழை இலக்கண இலக் கியங்களோடு கற்றுத் தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் கண்டறிந்து சிறந்த கவிஞராக, எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, நடிகராக விளங்கிய தமிழ்நாடகத்திற்கே தலைமை ஆசிரியராகப் பாராட்டப் பெற்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களைப் பற்றி 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலை, 50 ஆண்டுகள் கழித்து அவருடைய திருப்புதல்வன் புதிய பதிப்பாக வெளியிடுவது தமிழர்கள்