பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன்னுரை கலைமாமணிடி.கே.எஸ்.கலைவாணன்

   "நாடகம் கலைக்கரசு,நாட்டின் நாகரிகக் கண்ணாடி,பாமரர்களின் பல்கலைக்கழகம்,உணர்ச்சியைத் தூண்டிவிட்டு,உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பயன்படுத்தும் மகத்தான சக்தி"
   ஆம்!நாடகக் கலைக்காகவே வாழ்ந்து, தம் வாழ்நாளெல்லாம் நாடகக்கலைக்கே அர்ப்பணித்த என் அன்புத்தந்தையார் தமிழ் நாடகமேதை பத்மஸ்ரீ அவ்வை சண்முகம் அவர்களின் பொன்மொழிகள்தான்இவை நாடகம்தான் அவர் உயிர்மூச்சு தம் ஆறாவது வயதிலேயே தமக்கு நாடகக் கலையினைப் பயிற்றுவித்த - தம் குருநாதராக விளங்கிய 'தமிழ் நாடகத் தந்தை'யெனப் போற்றப்பெறும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் மாறாத பாசமும் பக்தியும் கொண்டிருந்தார் என் தந்தையார் சுவாமிகளின் பிறந்த நாளான செப்டம்பா 7-ஆம் நாளில் ஆண்டுதோறும், அவருக்கு விழா எடுத்தவர் அது மட்டுமல்லாமல், சுவாமிகளின் புகழ்பெற்ற நாடகங்களான சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா மற்றும் கோவலன் ஆகிய வற்றைச் சொந்தமாகப் பதிப்பித்து நூல் வடிவில் கொண்டு வந்தார்