பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

தம் குருநாதர் சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு நினைவு மன்றத்தினை 'சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்' என்னும் பெயரில் தொடங்கி, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் சுவாமிகளின் பிறந்தநாள் விழாவினைச் சிறப்பாக நடத்தி வந்தார் 1967-ஆம் ஆண்டில், தமிழகத் தலைநகராம் சென்னையிலும், 1968-ஆம் ஆண்டில் மதுரை மாநகரிலும், சுவாமிகள் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியதுடன், நாடகக் கலைக் கருத்தரங்கினையும் நடத்தி, பல்கலைக்கழக அளவிலே இக் கலைக்கு ஒரு முக்கியத்துவத்தைத் தந்தையார் ஏற்படுத்தினார்

சென்னையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவினை, அன்று தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா தலைமை தாங்கிச்சிறப்பித்தார் மதுரையில், தமுக்கம் திடலுக்கு முன்பாக, நிறுவப்பெற்ற சுவாமிகளின் திருவுருவச் சிலை யினையும், பேரறிஞர் அண்ணா திறந்து வைத்தார் மேலும், சென்னையில் நடைபெற்ற விழாக்களில் பாரத முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன், மத்திய அமைச்சர் சி சுப்ரமணியம், தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனஜி, முதலமைச்சர்கள் பக்தவத்சலம், டாக்டர் கலைஞர் கருணாநிதி, டாக்டர் எம் ஜி. ஆர் மற்றும் செட்டி நாட்டு அரசர் இராஜா சர் முத்தையா செட்டியார், தொழிலதிபர் அருட்செல்வர் நா மகாலிங்கம், தெ பொ மீனாட்சிசுந்தரனார், சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ சி , தமிழவேள், பி டி இராசன் போன்ற முக்கிய சான்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்

எனவே, இப்புகழ்வாய்ந்த சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்து ஒரு சிறிய நூலாகச் சொந்தமாகப் பதிப்பித்து வெளியிட்டார் தந்தையார் அந்நூல்தான் தமிழ்