பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக் கலைஞர்

ஒளவை டி.கே. சண்முகம் இலக்கியச்சுடர் மூவேந்தர்முத்து

    நாடகக் கலைஞர் கலைமாமணி ஒளவை டி கே சண்முகம் அவர்களின் 95-வது பிறந்த நாள் விழா 26 4 2006 அன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் நாடக உலகில் தனிப்பெரும் முத்திரை பதித்தவர் சிறந்த எழுத்தாளர் அவரைப்பற்றிய நினைவலைகளை எல்லோரும் அறிந்து கொள்வது மிகவும் நல்லது
    எளிமையானவர் பல நடிகர்களை உருவாக்கியவர் அவரைப்பற்றிய வரலாற்றை நாம் பார்ப்போம்
    புராண நாடகங்கள், தேசபக்தி நாடகங்கள், அறநெறி மற்றும் சீர்திருத்தக் கருத்துகள் கொண்ட நாடகங்கள் எனப் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியது டி கே எஸ் சகோதரர்களின் நாடக சபா அந்தச் சகேதரர்கள் நால்வரில் ஒருவர்தான் தி க சண்முகம் அவர்கள் "நாடகத் துறையில் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர்களில் தலையாய இடத்தைப் பெற்றவர் என்றும், நாடகத் துறையின் தொல்காப்பியர்" என்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
    1912, ஏப்ரல் 6ஆம் தேதி பிறந்த தி க சண்முகம் அவர்கள் தமது ஆறாவது வயதிலேயே நாடகத் தந்தை என்று