பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழே சிறந்தது

(சங்கரதாஸ் சுவாமிகள்)

பல்லவி

தமிழே சிறந்ததென உனது நாமம் விளங்க சாற்றும் அந்தப் பொருளை யாரறிவார்-அம்மா (தமி)

கண்ணிகள்

அமிழ்தினிற் சிறந்தது ஆரியத் துயர்ந்தது அகத்திய னார்சிவ னிடத்திலுணர்ந்தது அடிசீர் மோனை எதுகை தொடைசேர் தளையின்வகை யாகும் பாவினஞ் சந்தமா விரிந்தது வண்ணத் (தமி) திணைபால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப்பகுதி சேர்ந்தவிதங்களெல்லாம் தென்மொழிக்கே தகுதி இணையெனும் வடமொழி இருமொழியின் பேர்வழி இசைக்கும் எழுதுவ தெல்லாம் வலஞ்சுழி அதால் (தமி) அகரத்தோடகரஞ்சேர் வடமொழி தீர்க்கசந்தி ஆகுமென்றுரைப்பார்கள் அறியார்கள் புத்தி நந்தி மகரவொற்றிழிவிதி மார்க்கமென்பதைப் புந்தி வைத்தவர் மருவென்றாரே முந்தி அதால் (தமி) கயற்கண்ணி மொழிபெயர்ப்பதற்கென வுரைசெய்வார் கந்தபுராணமதின் காப்புச் செய்யுளறியார் இயற்படப் புணரியல் என்னுடன் வாதாடுவார் இசைமராடி என்பதற்கென் புக்ல்வார் அதால் (தமி) வடமொழி வழக்கில்லை வழங்குவர் தமிழ்ச்சொல்லை மலைவேங்கடங்குமரி மற்றிரு கடல் எல்லை இடமாக வகுத்தவர் இன்றுளார்களு மில்லை இயம்பும் மீனாட்சி என்ற பெயர் வல்லை அதால் (தமி)