பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி.கே. சண்முகம் 哆23

யரை விரட்டியடித்த வெள்ளையத் தேவன் பரம் பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக் குடியிலே தாமோதரக் கணக்கப் பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கரதாஸ் சுவாமிகள்.

கல்வி

தந்தையார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர். நகர மக்கள் அவரை 'இராமாயணப் புலவர் என்ற சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர்.

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச்செயல்' என்னும் தமிழ் மறையை நன்கறிந்த தாமோதரத் தேவர் தமது புதல்வனுக்குத் தாமே தமிழ்க் கல்வி புகட்டினார்.

அக்காலத்தில் புலவரேறு' என்று அறிஞர்களால் போற்றப்பட்ட பழனி தண்டபாணி சுவாமிகளிடம் நமது சுவாமிகள் பாடம் கேட்டுத் தமது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்ப் பாடம் கேட்டபோது நமது சுவாமிகளுக்கு உடுமலைச்சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்கள் சக மாணவரா யிருந்தார். கவிராயர் அவர்கட்கும் ஆசிரியர்