பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே தமிழ கத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய நடிகர்களான திருவாளர்கள் ஜி.எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேசபத்தர், ராஜா, வி.எம். கோவிந்தசாமிப்பிள்ளை, எம்.ஆர். கோவிந்தசாமிப் பிள்ளை, சி. கன்னையா, சி.எஸ். சாமண்ணா ஐயர், மகா தேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே.எஸ். அனந்த நாராயண ஐயர், கே. எஸ். செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை முதலியோ ரெல்லாம் நமது சுவாமிகளிடம் பயிற்சி பெற்ற வர்கள். அவரது பாடல்களைப் பாடிப் புகழ் பெற்ற வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையரிலும் திருமதிகள்பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி.டி. தாயம்மாள்முதலிய பலர்சுவாமிகளின் மாணவிகள் ஆவார்கள்.

சொந்த நாடகக் குழு

சமரச சன்மார்க்க நாடக சபை என்ற பெயரால் சுவாமிகள் தாமே சொந்தத்தில் ஒரு நாடக சபையையும் சில ஆண்டுகள் நடத்தினார். இந்த நாடகக் குழுவிலேதான் தமிழ் நாடக மேடையின் மங்காத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பாவும் அவரது சகோதரர்களும் பயிற்சி பெற்றனர். இசைப் புலவராக இன்று நம்மிடையே