பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டி.கே. சண்முகம்

❖29



வாழும் மதுரை திரு. மாரியப்ப சுவாமிகளும் இந்த நாடகக் குழுவில் தோன்றியவரே.

சிறுவர் நாடகக் குழு

கால வேகத்தில் நடிகர்கள் சுவாமிகளின் பாடல்களை மட்டுமே உபயோகித்துக்கொண்டு உரையாடல்களைத் தம் தம் உளப் போக்கிற்கேற்றவாறு பேசத் தொடங்கினர். நாடக மேடை விவாத மேடையாயிற்று. நாடகக் கலை நலியத் தொடங்கியது. ஸ்பெஷல் நாடகங்களிலே போட்டியும் பூசலும் தாண்டவமாடின. பெரிய நடிகர்கள் பலரிடம் ஏற்பட்ட இந்தக் கட்டுப்பாடின்மையே சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைகளின் தோற்றத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. மனம் போன போக்கில் பேசுபவர்கள்பால் வெறுப்புற்ற சுவாமிகள் கட்டுத் திட்டங்களுடன் அடங்கி நடிக்கும் முறையில் சிறுவர் நாடகக் குழுவைத் தோற்றுவித்தார்.

பால மீன ரஞ்சனி சபை

சுவாமிகள் ஆசிரியராக இருந்த முதல் 'பாய்ஸ்’ கம்பெனி திரு. ஜெகந்நாத ஐயர் அவர்களின்பால மீன ரஞ்சனி சங்கீத சபை. பிற்காலத்தில் ஆசிரியப் பொறுப்பேற்றுப் பல நடிக மணிகளைத் தோற்றுவித்த திருவாளர்கள் பி. டி. சம்பந்தம், எம். எஸ். முத்துகிருஷ்ணன், டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை,