பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் * 33

மறைவு

    இவ்வாறு ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும், தமிழ் நாடக உலகின் தந்தையாகவும் பல ஆண்டுகளைக் கழித்த சுவாமிகள், இறுதிவரை பிரமச்சாரியாகவே இருந்து 1922-ஆம்ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த புதுச்சேரி நகரில் தமது பூதவுடலை நீத்தார்.
   தமிழ் நாடகத் தாய் பெறற்கரிய தனது புதல்வனை இழந்தாள். நடிகர்கள் தங்கள் பேராசிரியரை இழந்தனர். கலையுலகம் ஒர் ஒப்பற்ற கலைஞரை இழந்து கண்ணீர் வடித்தது.
நாடக முறை வகுத்த பெரியார்
     ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாடக மேடையில் வசனங்கள் கிடையா. முழுதும் பாடல்களே பாடப்பட்டு வந்தன. அக்காலத்தில் நாடகங்களை இயற்றிய ஆசிரியர்கள் எல்லா நாடகங்களையும் இசை நாடகமாகவேதான் எழுதினார்கள். திருவாளர் அருணாசலக்கவிராயர் அவர்களின் 'இராம நாடகம்' இதற்குச்சான்று கூறும்.
    சில ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலை மாறி நடிக நடிகையர் தமது திறமைக்கும் புலமைக்கும் ஏற்றபடி நாடகக் கதைக்குப் புறம்பாகப் போகாமல் கற்பனையாகவே பேசிக்கொள்ளும் முறை