பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் பெருமை தெரியாத எவனோ ஒருவன் 'கோவலன்'என்ற பெயரால் ஒரு கூத்தைக் கிறுக்கி வைத்து விட்டான் என்பது புலவர்களின் எண்ணம்.

கோவலன் கதை நாடகமேடைக்கு வந்த வரலாறும் சுவாமிகளின் பெரும் புலமைத் திறனும் இவர்களுக்குத் தெரியாது. தமிழ்மொழியிலே உள்ள அடிப்படை நூல்கள் அத்தனையும் சுவாமிகளுக்கு மனப்பாடம். அவருடைய பாடல்களிலும் வசனங் களிலும் திருக்குறளும் நாலடியாரும் வாரி இறைக் கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, குறுந்தொகை முதலிய சங்கநூல்களிலே புதைந்து கிடக்கும் சீரிய பேருண் மைகளெல்லாம் சுவாமிகளின் உரையாடல்களிலே எளிமையோடு வெளிவந்து உலாவுவதைக்காணலாம்.

மணிமேகலையைச்சிறிதும் மாற்றம் செய்யாமல் காப்பியப்படியே நாடகமாக்கித் தந்த சுவாமிகள், சிலப்பதிகாரக் கோவலனுக்கு வேறு வடிவம் கொடுத்திருப்பாரா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடக மேடைக் கோவலனை அந்தக் காலத்தில் பண்டிதர்களும் பார்த்து மகிழ்ந்திருக் கின்றனர். அவர்களில் எவரும் சிலப்பதிகாரத்தோடு நாடகக் கோவலனை இணைத்துப் பார்த்துக் குறை கூற முன் வரவில்லை.