பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலந்தூர்

44 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

சுவை மிகுந்த இக் கதைகள் பெரும்பாலும் நாடகமாக்கி நடிக்கப்பட்டன. இந்த நங்கைக் கதைகளிலே ஒன்றுதான் கோவலன் என்ற பெயரால் நாடக மேடைக்கு வந்த கண்ணகி கதை.

முதலில் கோவலனை நாடக மேடைக்குக் கொண்டு வந்தவர்கள் ஆலந்தூர் ஒரிஜினல் நாடகக் கம்பெனியார் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இந்நாடகத்தை இரண்டு பாகமாக இரண்டு இரவுகள் நடத்தினார்களாம்.

'அல்லி பரமேஸ்வர ஐயர் 'அவர்கள் கம்பெனியில் சுவாமிகள் இருந்தபோது கோவலன் நாடகம் ஒரே இரவில் நடிக்கும் முறையில் புதிதாக எழுதப்பெற்றது. விலை மாதர் கூட்டுறவால் அல்லற் படும் இளைஞர்களுக்கு நீதி புகட்ட ஒரு புதிய கதையை எழுதுவதைவிட நாடு நன்கறிந்த கோவலன் கதையை எழுதுவது நல்ல பயனைத் தரும் என்பது சுவாமிகளின் நோக்கமாயிருந்திருக்க வேண்டும். முதலில் கோவலனாக நடித்த திரு. சூரிய நாரயண பாகவதர் அவர்கள் சிறந்த பாடகரா யிருந்ததால் அவருக்கென்றே பெரும்பாலும் வசனங்கள் தேவையில்லாத முறையில் எளிய நடையில் முழுதும் பாடல்களாகவே எழுதிக் கொடுத்தார் சுவாமிகள். அதன் பிறகு திரு. வேலு நாயர் அவர்கள் கோவலனாக நடித்தபோது வசனங் களும் எழுதப்பட்டன. திரு. பரமேஸ்வர ஐயர்